22ஆவது சுக்மா விளையாட்டுப் போட்டிக்கான சின்னம், இசை, கட்டமைப்பு அறிமுகம்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

ஷா ஆலம். ஆக. 18-

வரும் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் நடைபெறவிருக்கும் 22 ஆவது சுக்மா விளையாட்டுப் போட்டிக்கான லோகோ, சின்னம், இசை, கட்டமைப்பு ஆகிய நான்கு அம்சங்களை உள்ளடக்கிய அதற்கான வடிவமைப்புகளை மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அறிமுகம் செய்து வைத்தார்.

கடந்த 1998 இல் சிலாங்கூர் மாநில அரசு ஏற்று நடத்திய சுக்மா விளையாட்டுப் போட்டிகளின் போது வெள்ளை நிற கழுகு சின்னம் மாநிலத்தின் அடையாளச் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

15.8.2026 நடைபெறவிருக்கும் சுக்மா விளையாட்டுப் போட்டிகளில் 9 மாநிலங்கள் பங்கேற்பதோடு 12 நகராண்மைக் கழகங்கள் ஊராட்சி மன்றங்கள் இந்த நிகழ்ச்சியில் பொறுப்பேற்று நிகழ்ச்சியை வழி நடத்தும் என்று மந்திரி பெசார் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு மாநில செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரவு விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டு சுக்மா விளையாட்டுப் போட்டிக்கான சின்னத்தை அறிமுகம் செய்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றிய அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணையமைச்சர் அடாம் அட்லி அப்துல் ஹலிம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தலைமைச்
செயலாளர் டாக்டர் நகுலேந்திரன் கங்கையட்கரசு, மலேசிய ஒலிம்பிக் மன்றத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் நோர்ஷா ஜக்காரியா,மாநில நிதி நிர்வாக அதிகாரி டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹானிஃப் ஸைனால் அபிடின், சபாக் பெர்ணம் மாவட்ட மன்றத் தலைவர் அவாலுடின் ஜக்காரியா மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் என இருநூறுக்கும் மேற்பட்டோர் இரவு விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *