துவான் இப்ராஹிமுக்கு எதிராக அன்வார் அவதூறு வழக்கு!
- Shan Siva
- 11 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 11: கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கட்சித் தேர்தல் கூட்டத்தில் பேசிய கருத்துகளைத் திரும்பப் பெறவும், மன்னிப்புக் கேட்கவும் 48 மணி நேரம் அவகாசம் வழங்கிய சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பிரதமர் அன்வார் இப்ராஹிம், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் மீது அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
அன்வரின் வழக்கறிஞர் எஸ்.என். நாயர் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
பகாங்கின் கோலா கிராவ், ஃபெல்டா ஜெண்டராக் உத்தாராவில் ஜூன் 14 அன்று நடைபெற்ற பாஸ் கட்சித் தேர்தல் கூட்டத்தில் துவான் இப்ராஹிம் கூறியதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களை விமர்சிப்பவர்கள் விரைவில் காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக நேரிடும் என்றும் அன்வார் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



