அன்வாரின் மூத்த சகோதரர் காலமானார்!
- Shan Siva
- 25 Sep, 2026
கோலாலம்பூர், செப் 25: பிரதமர் டத்தோஸ்ரீஅன்வார் இப்ராஹிமின் மூத்த சகோதரர் இத்ருஸ் இப்ராஹிம் காலமானார்.
தனது சகோதரரின் இறுதித் தருணங்களில் அவருடன் இருக்க முடியாமல் போனது குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாக அன்வார் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிலிருந்து மலேசியா திரும்பிக்கொண்டிருந்தபோது தனக்கு இந்தச் செய்தி கிடைத்ததாக அன்வார் கூறினார்.
எதிர்பாராத இந்த விடைபெறலை ஏற்றுக்கொள்ள என் மனம் இன்னும் போராடிக்கொண்டிருந்தாலும், நான் அதை ஏற்றுக்கொண்டுவிட்டேன்.
எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும் அனைத்து நினைவுகளுக்கும் நன்றி என்று கூறிஇத்ருஸை அன்வார் கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.
இத்ருஸ், பினாங்கு மாநிலம் புக்கிட் மெர்தாஜாமில் உள்ள எஸ்கே ஸ்டோவெல் (SK Stowell) பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

