பரவாயில்லை... ஹாடிதான் வலிமையானவர்! - அன்வார்
- Shan Siva
- 13 Sep, 2024
காஜாங்: அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலாய்க் கட்சிகள் பலவீனமாக இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் கருத்து குறித்து கருத்து தெரிவிக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மறுத்துவிட்டார்.
இன்று காஜாங்கில் உள்ள மஸ்ஜித் அல்-இமான் டேசா புத்ராவில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பிறகு, "அது பரவாயில்லை, ஹாஜி ஹாடிக்கு, அவர் மட்டுமே வலிமையானவர் என்று அன்வார் கூறினார்.
ஹலால் சான்றிதழ் தொடர்பான பிரச்னைகளில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலாய்க் கட்சிகள் முஸ்லிம் அல்லாதவர்களைக் கையாளும் திறன் கொண்டவர்கள் அல்ல என்று நேற்று ஹாடி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் மலாய் மற்றும் இஸ்லாமிய கொள்கைகளால் வழிநடத்தப்பட்ட போதிலும், முஸ்லிமல்லாதவர்களின்குறுக்கீடுகளில் இருந்து இஸ்லாத்தின் புனிதத்தை பாதுகாக்கத் தவறிவிட்டதாக அவர் கூறினார்.
இதனை அடுத்து அன்வாரிடம் இந்தக் கேள்வி முன் வைக்கப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *