தவெகவில் இணைய ஓ. பன்னீர்செல்வம் முடிவு
- Surendran Sumdraraj
- 30 Jul, 2026
சென்னை, ஜூலை 30-
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அவர் விரைவில் தனது சட்டப்பேரவை உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜினாமாவிற்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இந்த அரசியல் நகர்வு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸின் இந்த முடிவு, எதிர்க்கட்சிகளின் பலத்திலும் சட்டப்பேரவையின் அரசியல் கணக்கீடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



