மெர்சிங்கில் படகுகள் மோதி விபத்து! இருவர் பலி!

top-news
FREE WEBSITE AD

மெர்சிங், செப் 1: நேற்று இரவு சுங்கை மெர்சிங் முகத்துவாரத்திற்கு அருகே இரண்டு படகுகள் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து இரவு 9.04 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அழைப்பைத் தொடர்ந்து, மெர்சிங்கில் இருந்து ஒன்பது பணியாளர்களுடன் ஒரு தீயணைப்பு வாகனம் மெர்சிங் படகுத்துறைக்கு அனுப்பப்பட்டது.

செயல்பாட்டுக் குழுவினர் அங்கு சென்றபோது, ​​இரண்டு படகுகள் மோதிக்கொண்டதைக் கண்டனர்.

உயிரிழந்த இருவர் மருத்துவப் பணியாளர்களால் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கை கூறியது.

காயமடைந்த மற்ற நான்கு பேர் சிகிச்சை பெற்று வருவதாக அத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது என்றும், விரைவில் ஓர் அறிக்கை வெளியிடப்படும் என்றும் மெர்சிங் காவல்துறைத் தலைவர் அப்துல் ரசாக் அப்துல்லா சானி கூறினார்! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *