யானைகளால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க, ஜொகூரில் 21 இடங்களில் உணவுக் களஞ்சியம்-லிங் டியான் சூன்!
- Muthu Kumar
- 13 Nov, 2024
கோகி கருணாநிதி
கோத்தா திங்கி, நவ.13-
மனிதர் மற்றும் யானைகள் இடையிலான பிரச்சினைகளை தவிர்க்க, ஜொகூரில் 21 இடங்களில் உணவுக் களஞ்சியம் அமைக்கப்படும். இந்த பிரச்சினையை நீண்டகாலத்தில் தீர்க்கும் முயற்சியாக இதை செயல்படுத்த உள்ளதாக ஜொகூர் மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தலைவர் லிங் டியான் சூன் தெரிவித்தார்.
தற்காலிகமாக நான்கு உணவுக் களஞ்சியங்கள் செயல்பாட்டில் உள்ளன, இதில் இரண்டு ஜொகூர் யானை சரணாலயத்தில், கோத்தா திங்கியில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலும், கோத்தா திங்கி, குளுவாங் மற்றும் மெர்சிங் போன்ற இடங்களில் உள்ள யானைகள் செல்லும் பகுதிகளில் கூடுதல் உணவுக் களஞ்சியங்கள் ஏற்படுத்தப்படும் என்றார். இந்த உணவுக் களஞ்சியங்களை உருவாக்கும் முயற்சியில் மாநில அரசு, மற்ற தோட்ட உரிமையாளர்களுடனும் ஒத்துழைத்து வருகிறது. இந்த உணவுக் களஞ்சியங்களில் நாப்பியர் புல், வாழை மற்றும் கரும்பு போன்றவை பயிரிட்டு, யானைகளுக்கு உணவாகக் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
மேலும், கோத்தா திங்கி பகுதியில் உள்ள பாண்டி காடு பகுதியைச் சுற்றி 16 கிலோமீட்டர் நீளமுள்ள மின்சார வேலியை அமைக்க ஜொகூர் அரசு 9 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது. யானைகள் அருகிலுள்ள ஒன்பது கிராமங்களில் நுழைந்து விளை நிலங்களை சேதப்படுத்தாமல் தடுக்கும் இந்த முயற்சியால், அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளும் பாதுகாக்கப்படும்.
இந்த அணுகுமுறை யானைகள் மற்றும் மனிதர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். யானைகளுடன் மோதல்களைத் தவிர்க்க சிறந்த வழிமுறைகளை ஆராய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் உணவுக் களஞ்சியத்தை உருவாக்குவது சிறந்த வழியாகக் கருதப்படுகிறது என லிங் டியான் சூன் குறிப்பிட்டார்.
இந்த முயற்சிகள் மூலம் மனிதர் மற்றும் யானைகள் இடையிலான மோதல்கள் 50 சதவீதம் குறைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.நீண்ட மற்றும் குறுகியகால முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு, - உடனடி தீர்வாகப் பறிமுதல் மற்றும் இடமாற்றம் போன்ற தற்காலிக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த நேரத்தில் JES க்கு மேலாக குளம், நடைபாதை மற்றும் பிற வசதிகளை உள்ளடக்கிய இரண்டாவது கட்டத்தில் யானைகள் சரணாலயத்தில் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த சரணாலயம் 2026 ஆம் ஆண்டில் பொதுமக்கள் வருகைக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது ஜொகூரில் மேலும் ஒரு சுற்றுலா ஈர்ப்பாக இருக்கும் என்பதையும் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *