தேசத்தின் செல்வத்தைக் கொள்ளையடிக்கும் எந்தக் கட்சிகளுடனும் சமரசம் இல்லை! - அன்வார்
- Shan Siva
- 18 Nov, 2024
ரியோ டி ஜெனிரோ, நவம்பர் 18: வெளிநாட்டில் உள்ள மலேசியர்கள் உட்பட அனைத்து மலேசியர்களும் நன்மை பயக்கும்
முயற்சிகளை செயல்படுத்துவதில் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க
வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போதைய
அரசாங்கத்தில் ஒரு வலுவான குழு உள்ளது என்பதை தாம் வலியுறுத்த விரும்புவதாகவுஜ்ம், அந்தக் குழு ஒட்டுமொத்த மக்களுக்கும் பயனளிக்கும்
கொள்கைகளையும் உத்திகளையும் செயல்படுத்த கடுமையாக உழைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊழல்வாதிகளுடனோ
அல்லது தேசத்தின் செல்வத்தை கொள்ளையடிக்கும் எந்தக் கட்சிகளுடனும் மடானி அரசு
சமரசம் செய்து கொள்ளாது என்று அவர் கூறினார்.
நேற்று ரியோ டி
ஜெனிரோவில் சுமார் 200 மலேசிய புலம்பெயர் உறுப்பினர்கள் மற்றும்
மலேசிய நண்பர்கள் கலந்து கொண்ட இரவு விருந்தில் அவர் இந்த கருத்துக்களை
தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *