WTA டென்னிஸ் தொடர் இறுதிப்போட்டியில் கோகோ காப் மற்றும் குயின்வென் ஜெங் மோதல்!

top-news

உலகின் சிறந்த-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.ஒற்றையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

இரவு 11 மணிக்கு நடைபெற்ற முதல் அரையிறுதியில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா மோதினார்.இதில் குயின்வென் ஜெங் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இரவு 12:15 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவுடன், அமெரிக்காவின் கோகோ காப் மோதினார்.இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 7-6 (7- 4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டியில் நுழைந்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *