இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று பிறந்தநாள்!

top-news
FREE WEBSITE AD

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் பிரபலமானவர். அவருக்கென பல கோடி பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கிவரும் அவர்; இன்று தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்து பல கஷ்டங்களை சந்தித்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். குடும்பத்தின் பொருளாதாரத்துக்காக படிப்பை விட்டுவிட்டு இசைத்துறைக்குள் வந்த அவர்; இளையராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்டோரிடம் பணியாற்றினார். அதனையடுத்து விளம்பர படங்களுக்கு இசையமைத்துவந்த அவர், மணிரத்னத்தின் இயக்கத்தில் ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் இசையமைத்த பாடல்கள் எல்லாம் பட்டையை கிளப்பின. அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

ரோஜா பட பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்ததை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மானின் கொடி உயர பறக்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் ராஜாவின் கோட்டையாக இருந்த தமிழ் சினிமாவை மொத்தமாக பிடித்துவிட்டார். எங்கும் ரஹ்மான் மயமாகவே இருந்தது. தமிழில் அவர் கொடுத்த ஹிட் பாடல்கள் காரணமாக பாலிவுட் கதவுகளும் திறக்க, அங்கேயும் சென்று தனது தடத்தை ஆழமாக பதித்தார் இசைப்புயல்.

கோலிவுட், பாலிவுட் என வளர்ந்த அவருக்கு ஹாலிவுட்டிலும் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்திக்கொண்ட அவர்; ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசையமைத்து கோல்டன் க்ளோப், கிராமி, ஆஸ்கர் விருதுகளை அள்ளினார். ஆஸ்கர் விருது வென்றதிலிருந்து ஆஸ்கர் நாயகன், ஆஸ்கர் தமிழன் என்று கொண்டாடப்படுகிறார். கடைசியாக தமிழில் அவர் காதலிக்க நேரமில்லை, தக் லைஃப் படங்களுக்கு இசையமைத்தார். தற்பொழுது தனுஷ் நடிப்பில் வெளியான தேரே இஷ்க் மெய்ன் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

அடுத்ததாக அவர் மூன்வாக் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஐந்து பாடல்களையும் அவரே பாடவும் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். இதில் பிரபுதேவா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று ஏ.ஆர்.ரஹ்மான் தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். மூன்வாக் திரைப்பட குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் அவர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *