சபாவில் மிதமான நிலநடுக்கம்!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூன் 2: :  பிற்பகல் 2.49 மணியளவில், சபாவின் செம்போர்னாவிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில், ரிக்டர் அளவுகோலில் 3.3 அளவுள்ள மிதமான  நிலநடுக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் வடக்கே 4.4 டிகிரியிலும், கிழக்கே 118.9 டிகிரியிலும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா  தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் ஏற்படாது என அது உறுதிப்படுத்தியுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *