ஹாலிவுட்டில் அறிமுகமாக இருக்கும் யோகி பாபு மற்றும் ஜி வி பிரகாஷ்!

top-news

Trap City' படம் மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் நடிகர் யோகி பாபு.
திருச்சியை சேர்ந்த இயக்குநர் டெல்.கே.கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'Trap City.

இந்த படத்தில் பிராண்டன் டி. ஜாக்சன், ஜே ஜென்கின்ஸ், நெப்போலியன், ஜி.வி. பிரகாஷ் குமார், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருகின்றனர். சவாலான இசை துறையில் ஒரு இளம் இசைக் கலைஞனின் போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தை இயக்கிய டெல்.கே.கணேஷன் தனது கைபா பிலிம்ஸ் பேனரில் தயாரித்தும் இருக்கிறார். ஏற்கெனவே நெப்போலியனை டெவில்ஸ் நைட்: 'டான் ஆஃப் தி நைன் ரூஜ்' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தி இருந்தார் டெல் கே. கணேஷன்.

தற்போது 'Trap City' படத்தின் மூலம் ஜி. வி பிரகாஷ், யோகி பாபுவையும் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. படம் டிசம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஹாலிவுட்டுக்கு நடிக்க சென்ற யோகி பாபுவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *