யோகி பாபு பெண் வேடத்தில் நடிக்கும் மிஸ் மேகி! உடன் நடிக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!

top-news

சமையல் கலை மூலமாக இணையம் முழுவதும் பிரபலமடைந்த மாதம்பட்டி ரங்கராஜ் மீண்டும் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார்.அவரது படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்போது அவர் மிகப்பெரும் சமையல் கலை நிபுணர் என்ற விபரம் பலருக்கும் தெரியாது.

ஆனால் இந்த படத்திற்கு பின்னர் சமையல் கலை காணொளி மூலமாக மாதம்பட்டி ரங்கராஜ் மிகவும் பிரபலமடைந்தார்.இவரது தலைமையிலான உணவு கலைஞர்கள் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் உணவு தயாரித்து கேட்டரிங் செய்துள்ளனர்.அந்த வகையில் இவரது சமையல் நிறுவனம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் இவர் பதிவியிடும் சமையல் வீடியோக்கள் பலரது கவனத்தை பெற்றுள்ளன.

இவர் நடிகராக இருந்து பெற முடியாத புகழை சமையல் கலை இவருக்கு கொடுத்துள்ளது. மேலும் இவர் குக் வித் கோமாளி 5-ஆவது சீசனில் நடுவராக இருந்து கவனம் ஈர்த்தார். இந்நிலையில் மீண்டும் அவர் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார்.

அவர் நடிப்பில் உருவாகி வரும் மிஸ் மேகி என்ற படத்துடைய டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபல நடிகை ஆத்மிகா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.மிஸ் மேகி படத்தில் யோகி பாபு பெண் வேடத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு புதுமையை ஏற்படுத்தியுள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *