ஜொகூர் - குளத்தில் ஆடவர் சடலம்!

top-news

ஜொகூர், செப் 24: நேற்று இரவு, ஜொகூர், இஸ்கண்டார் புத்ரி ஜலான் பொந்தியான்-ஸ்கூடாய் (Jalan Pontian-Skudai) பகுதியில் உள்ள ஒரு குளத்தில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஜொகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு மாலை 7:26 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, ஸ்கூடாய் நிலையத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது; அவர்கள் ஏழு நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தனர்.

சடலத்தை மீட்கும் பணியை அதிகாரி இங்காய் பாகாவ் (Inggai Bakau) தலைமையேற்று நடத்தினார்.

குளத்தின் கரையில் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும், உயிரிழந்தவரிடம் அடையாளம் காணக்கூடிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காகச் சடலம் கங்கார் புலாய் (Kangkar Pulai) காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மீட்புப் பணி இரவு 9:45 மணிக்கு நிறைவடைந்தது.

உயிரிழந்தவர் குறித்த கூடுதல் விவரங்களை இஸ்கண்டார் புத்ரி காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *