சமூக ஊடகங்களைத் தடை செய்யும் எண்ணம் இல்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 31: சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் தளங்கள் லைசென்ஸ் பெற வேண்டும் என்கிற அரசின் அண்மைய திட்டம், தளங்களைத் தடுக்கவோ அல்லது தடைசெய்யவோ நோக்கமாகக் கொண்டது இல்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

மலேசியா எந்தவொரு சமூக ஊடக தளத்தையும் தடுக்கவோ அல்லது தடைசெய்யவோ விரும்பவில்லை. நிச்சயமாக மதிப்பு இருப்பதை தாங்கள் காண்கிறோம் என்று சேனல் நியூஸ் ஏசியாவிற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ஃபஹ்மி, இணைய அணுகல் மலிவு விலையில் இருப்பதால், சமூக ஊடக தளங்களுக்கான ஆரோக்கியமான சந்தையாக நாடு உள்ளது என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *