ROS விவகாரத்தால் BN உடனான பேச்சுவார்த்தையில் சிக்கல் இல்லை- தக்கியுதீன் ஹசான்
- Shan Siva
- 26 Sep, 2026
கோலாலம்பூர், செப் 26: மலாக்கா தேர்தலுக்காக BN-உடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளை, PN கூட்டணியின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் பாதிக்கவில்லை என்று PN தெரிவித்துள்ளது.
PN-இன் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தக்கியுதீ ஹசான், இரு கூட்டணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவை 50 சதவீதத்திற்கும் மேலாக முன்னேறியுள்ளதாகவும் கூறினார்.
இருப்பினும், தொகுதிகளைப் பங்கிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், அது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மலாக்காவில் முஸ்லிம் ஒற்றுமைக்கான செயல்திட்டத்தை தங்களால் செயல்படுத்த முடியும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடனும் நேர்மறையான கண்ணோட்டத்துடனும் இருக்கிறோம் என்று அவர் கூறினார்.
நேற்று நடைபெற்ற 'புனுட் பயோங் கர்னிவல் சக்னா ரக்யாட்' (Bunut Payong Karnival Cakna Rakyat) நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

