லோகேஷ் - அல்லு அர்ஜுன் இணையும் திரைப்படம் 800 கோடியில் உருவாகிறதா ?

top-news
FREE WEBSITE AD

லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இப்படத்தின் அறிவிப்பு விடியோ வெளியாகி கவனத்தைப் பெற்றது. அனிருத் இசையமைத்த பின்னணி இசையும் வைரலானது.இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 800 கோடி என்றும் இதில் அல்லு அர்ஜுன் ரூ. 400 கோடி சம்பளம் பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சூர்யாவை வைத்து இயக்க இருந்த இரும்புக்கை மாயாவி திரைப்படத்தைதான் அல்லு அர்ஜுன் படமாக லோகேஷ் எடுப்பதாகவும் கூறப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *