லோகேஷ் கனகராஜ் தனது படகுழுவுடன் அடுத்த படத்துக்கு ரெடி!
- Muthu Kumar
- 27 Nov, 2025
கூலி திரைப்படத்தை இயக்கிய பின் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க துவங்கினார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களை போலவே இந்த படத்திலும் ரத்தம் வலியும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. டைட்டில் டீசர் வீடியோவையும் வெளியிட்டார்கள்.
ஒருபக்கம் லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. அநேகமாக அது கார்த்தியை வைத்து கைதி 2-வாக இருக்கலாம் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது உதவியாளர்களுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பலரும் பகிர்ந்து 'கைதி 2 படத்தின் வேலையில் லோகேஷ் இறங்கிவிட்டார்' என பதிவிட்டு வருகிறார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



