லோகேஷ் கனகராஜ் படத்தின் புரோமோ!

top-news
FREE WEBSITE AD

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகும் படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.இப்படம் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளது. இதற்காக, லோகேஷ் தற்காப்பு கலைகளையும் கற்றுக்கொண்டார்.

இப்படத்திற்கான பூஜையும் அண்மையில் நடைபெற்று படப்பிடிப்பும் துவங்கியது.இந்த நிலையில், இப்படத்திற்கு டிசி (DC) எனப் பெயரிட்டுள்ளதாக டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும் சந்திராவாக வாமிகா கபியும் நடித்துள்ளனர்.

புரோமோவில் ரத்தகறையுடன் லோகேஷ் கனகராஜ் நடந்துவருவதும் பாலியல் தொழிலாளியாக வாமிகாவும் நடித்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *