அனிருத் பற்றி லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி!
- Muthu Kumar
- 11 Aug, 2025
கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படம் வெளியாவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கின்றன.மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் பெற்றிருக்கும் நிலையில் படத்தில் தன்னுடைய வேலைகள் அனைத்தையும் முடித்திருக்கும் அனிருத் பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில்; கடந்த சில நாட்களாகவே படத்துக்கு இசையமைக்கும் இறுதிக்கட்ட பணிகளை தனது டீமுடன் மும்முரமாக செய்துவந்தார் அனி. இந்நிலையில் இப்போது படத்தின் வேலைகள் முடிந்துவிட்டன. விக்ரம், லியோ படங்களின் இறுதி பணிகள் முடிந்தபோது எப்படி அனிருத்தும், லோகேஷும் இருந்த புகைப்படம் வெளியானதோ; அதேபோல் இப்போது கூலிக்கும் வெளியிட்டிருக்கிறார்கள்.
மேலும் அனி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "நான்கு முறை இணைந்திருக்கிறோம். ஒவ்வொருமுறையும் பிளாஸ்ட்தான். இன்னொரு தாயிடமிருந்து வந்த என் சகோதரர் அனிருத்துக்கு ஐ லவ் யூ" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



