தங்கக் கனவு தகர்ந்தது! ஒலிம்பிக் அரையிறுதி ஆட்டத்தில் Pearly Tan - M.Thinaah ஜோடி தோல்வி!

top-news

பாரிஸ், ஆகஸ்ட் 2:  பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பி போட்டியில், இன்று நடைபெற்ற பூப்பந்து போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவின் அரையிறுதியாட்டத்தில் தேசிய மகளிர் இரட்டையர்களான Pearly Tan - M.Thinaah ஜோடி  சீனாவிடம் வெற்றியைப் பறிகொடுத்தனர்,

மலேசிய நேரப்படி இன்று மதியம் 2.30க்கு தொடங்கிய இவ்வாட்டத்தில்

Pearly Tan - M.Thinaah உலகத் தரவரிசையில் முதல் நிலையில் இருக்கும் சீனாவின் Chen Qing Chen - Jia Yi Fan-யை எதிர் கொண்டனர். 

20 நிமிடங்களில் நீடித்த முதல் சுற்று ஆட்டத்தில்  Pearly Tan - M.Thinaah இணை 21-12 என்ற புள்ளியில் சீனாவிடம் வீழ்ந்தது.

இரண்டாவது சுற்றில் 18- 21 என்ற புள்ளியில் சீன அணியை மலேசியா வென்றது.

இந்நிலையில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது சுற்று ஆட்டத்தில் சீனாவின் Chen Qing Chen - Jia Yi Fan இணை 21-15 என்ற புள்ளி கணக்கில் மலேசிய அணியை வென்றது!

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *