தெலுக் கும்பார் கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய டோல்ஃபின் மீன்!

top-news
FREE WEBSITE AD

ஜோர்ஜ் டவுன், நவ. 8-

பினாங்கின் ஜோர்ஜ் டவுன் அருகே தெலுக் கும்பாரில் கரையொதுங்கிக் கிடந்த டோல்ஃபின் மீன் மீண்டும் ஆழ்கடலுக்குக் கொண்டுபோய் விடப்பட்டது. 1.5 மீட்டர் நீளம் கொண்ட அந்த மீன் பலத்த அலைவீச்சினால் கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் மாலை 5.30மணியளவில் கரையோரத்தில் ஆழமற்ற பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த அந்த மீனைக் கண்ட மீனவர்கள், அதனைப் பிடித்து ஆழ்கடலுக்குள் கொண்டு சென்றனர். அம்மீன் பலவீனமாகக் காணப்பட்டாலும், அது வேகமாக கடலுக்குள் நீந்தி மறைந்தது என்று சம்சுவார் ஹஷிம் எனும் மீனவர் தெரிவித்தார்.

தெலுக் கும்பார் கடற்கரையில் உயிருடன் டோல்ஃபின் மீன் ஒன்று கரையொதுங்கியது இதுவே முதன்முறையாகும். மலேசிய கடல்பகுதியில் இருபத்தேழு வகையான திமிங்கிலங்கள், டோல்ஃபின்கள், போர்போய்ஸ் ஆகிய பாலூட்டி மீன்கள் காணப்படுகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *