ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 2 மில்லியன் ரிங்கிட் பரிசு! - YB HANNAH YEO

top-news

2024-ஆம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை வெல்லும் வீரருக்கு 2 மில்லியன் ரிங்கிட் பரிசாக வழங்கப்படும் என இளைஞர் விளையாட்டு அமைச்சின் அமைச்சர் HANNAH YEO இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மலேசிய வீரர்களின் வாழ்வாதாரத்தை இது மேம்படுத்தும் வகையில் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Yinson Holdings Berhad, Matrix Concepts Holdings Berhad, MJ Health Screening Centre என மலேசியாவின் 3 வணிக நிறுவனங்களின் ஆதரவில் இந்த பரிசுகள் வழங்கப்படுவதாகவும், மலேசிய வீரர்கள் தங்கம் வென்றால் அவர்களுக்கு CHERY நிறுவனத்தின் உயர் ரக SUV வாகனம் பரிசாக வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா மலேசிய நேரப்படி நாளை அதிகாலை 1 மணிக்கு நடைபெறுகிறது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *