‘ஓம்’ படப்பிடிப்பில் பத்ம பூஷண் விருது பெற்ற மம்முட்டிக்கு தனுஷ் உற்சாக வரவேற்பு
- Surendran Sumdraraj
- 26 Jun, 2026
சென்னை, ஜூன் 26 –
பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் மம்முட்டிக்கு, ‘ஓம்’ திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தனுஷ் மற்றும் படக்குழுவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமக்கள் விருதான பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்ற மம்முட்டிக்கு, ‘ஓம்’ படக்குழு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்து, மலர்க்கொத்து வழங்கி கவுரவித்தது. இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இந்நிகழ்வையொட்டி, ‘ஓம்’ படத்தில் மம்முட்டி ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் முதல் தோற்ற (First Look) போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. அவரது கதாபாத்திரம் ரசிகர்களின் நீண்டநாள் காத்திருப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்கும் என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



