வளர்ப்பு பேரக்குழந்தையைக் கொன்ற பெண் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
- Shan Siva
- 12 Aug, 2026
கோலாலம்பூர்,
ஆக 12: கடந்த மாதம் தனது வளர்ப்புப்
பேரக்குழந்தையைக் கொலை செய்ததாக 39 வயதான பெண் ஒருவர் மீது இன்று கோத்தா திங்கி
நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி ஹஃபிஸா
அப்துல் ரசாக் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, நூருல் ஃபர்ஹானா லைலி ஷா தலையசைத்தார்.
குற்றப்பத்திரிகையின்படி,
ஜூலை 30 அன்று மதியம் 12.30 மணிக்கும் மறுநாள்
காலை 9.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், தமன் ஸ்ரீ சௌஜானாவில் உள்ள ஒரு வீட்டில் 16 மாதக் குழந்தையான நூர் அங்குன்
டாலியா அப்துல்லாவைக் கொலை செய்ததாக நூருல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொலைக்கான
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் இந்தக் குற்றச்சாட்டு பதிவு
செய்யப்பட்டுள்ளது.
இரசாயன, பிரேதப் பரிசோதனை மற்றும் டிஎன்ஏ அறிக்கைகள்
வரும் வரை விசாரணைக்கான தேதியை நிர்ணயிக்குமாறு துணை அரசு வழக்கறிஞர் நூர் அஃபிகா
மூசா நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்; ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்த வழக்கை
மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள டிசம்பர் 11-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



