இந்தோனேசிய ஆடவரைக் கொலை செய்த பெண் மீது இன்று குற்றச்சாட்டு!
- Shan Siva
- 19 Jun, 2026
சிப்பாங், ஜூன் 19: இந்த மாத தொடக்கத்தில் பண்டார் சன்சூரியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் இந்தோனேசிய பிரஜை ஒருவரைக் கொலை செய்ததாக, இங்குள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று ஒரு பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஜூன் 3 ஆம் தேதி பிற்பகல் 2.31 மணிக்கு, பண்டார் சன்சூரியா, ஜாலான் சன்சூரியா 1, தி ஆலிவ், பிளாக் பி-யில் உள்ள ஒரு குடியிருப்பில், புத்ரி என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவரின் மரணத்தை ஏற்படுத்தியதாக 44 வயதான சின் சியாவ் லான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் இந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

