பொது இடத்தில் கத்தியைக் காட்டிய வீடில்லாப் பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 21:

பொது இடத்தில் கத்தியை எடுத்துச் சென்ற பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.நீதிபதி இஸ்ரலிசம் சனுசி, 47 வயதான ஜெய்ம் ஜமிலா அப்துல்லா என்ற அந்தப் பெண்ணுக்கு இந்த தண்டனையை விதித்துள்ளார்.

ஜாலான் கஸ்தூரி, டாங் வாங்கி, ஜாலான் லெபு புடுவில் உள்ள ஹோட்டல் முன் அனுமதியின்றி 24 செ.மீ நீளமுள்ள கத்தியை எடுத்துச் சென்றதாக அப்பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஸ்பர் அசதுல்லா அப்துல் சத்தார், தனது கட்சிக்காரர் வேலையில்லாத ஒரு வீடற்ற நபர் எஎன்று கூறினார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உணவை நம்பியிருந்தார் என்று குறிப்பிட்டார். மேலும், ஆபத்தான சூழலில் வாழ்ந்ததாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *