'மாமாக்' கடைகளில் இனி சிகரெட் இருக்காது! PRESMA அதிரடி முடிவு
- Shan Siva
- 07 Oct, 2024
அனைத்து இந்திய முஸ்லீம் உணவகங்களும் சிகரெட் விற்பனையை நிறுத்த வேண்டும் என்று மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கமான பிரெஸ்மா முன்மொழிந்துள்ளது.
சங்கத்தின் கீழ் உள்ள 12,000 உணவகங்களில் 40 விழுக்காடு உணவகங்கள் இனி புகையிலை பொருட்களை விற்பனை செய்வதில்லை என்று முடிவு செய்துள்ளதாக பிரஸ்மா தலைவர் ஜவஹர் அலி தைப் கான் கூறினார்.
இது உணவுத் தொழிலுக்கு சாதகமான முன்னேற்றம் என்று அவர் கூறினார்.
சிகரெட் விற்காததற்காக, புஞ்சாக் ஆலமில் உள்ள ஓர் உணவகத்தில் சுகாதார அமைச்சர் பாராட்டுக் கடிதம் கொடுத்ததை சுட்டிக்காட்டிய அவர், இதை நோக்கிச் செல்ல இது ஒரு நல்ல திசை என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
இருப்பினும், வாடிக்கையாளர்கள் தங்கள் வளாகத்தில் புகைபிடிப்பதைத் தடுக்கத் தவறியதற்காக உணவக நடத்துநர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்ட விதிகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
ஆபரேட்டர்கள் தங்கள் உணவகங்களில் புகைபிடிக்க வேண்டாம் என்று கட்டளையிடுவது கடினம் என்று ஜவஹர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *