நாளை எஸ்கே - 23 படத்தின் பெயர் கிளிம்ஸ் வெளியீடு!

top-news

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் மற்றும் பிஜு மேனன் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, திடீரென நடிகர் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தை இயக்க ஏ. ஆர். முருகதாஸ் மும்பை சென்றார்.
இதனால், சில வாரங்கள் எஸ்கே - 23 படத்தின் படப்பிடிப்பு நிகழாமல் இருந்தது. பின், மீண்டும் சில நாள்கள் நடைபெற்றது. பொங்கலை முன்னிட்டு டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த அறிவிப்பும் இல்லை.

இந்த நிலையில், எஸ்கே - 23 படத்தின் பெயர் கிளிம்ஸ் காணொளியை நாளை பிப். 17 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *