மானியமில்லா RON95 & டீசல் விலை உயர்வு – இன்று முதல் அமல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 16: மலேசியாவில் மானியமில்லா RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று முதல் உயர்த்தப்படுகின்றன.

நிதி அமைச்சின் அறிவிப்பின்படி, மானியமில்லா RON95 பெட்ரோல் லிட்டருக்கு 5 சென் உயர்த்தப்பட்டு RM3.42 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மானியமில்லா டீசல் லிட்டருக்கு 10 சென் அதிகரித்து RM4.07 ஆக விற்பனை செய்யப்படும்.

ஆனால், RON97 பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது தொடர்ந்து லிட்டருக்கு RM4.00 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படும்.

இதற்கிடையில், BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RON95 பெட்ரோல் லிட்டருக்கு RM1.99 என்ற விலையிலேயே தொடரும். அதேபோல், BUDI Diesel திட்டத்தின் கீழ் டீசல் RM2.10 என்ற நிலையான விலையில் கிடைக்கும்.

மேலும், SKPS மானிய பெட்ரோல் திட்டத்தின் கீழ் RON95 RM2.05 ஆகவும், SKDS மானிய டீசல் திட்டத்தின் கீழ் டீசல் RM2.15 ஆகவும் மாற்றமின்றி தொடரும்.
இந்த புதிய எரிபொருள் விலைகள் ஜூலை 16 முதல் ஜூலை 22 வரை அமலில் இருக்கும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *