நோபல் பரிசுக்கு பதில் ஃபிஃபா அமைதி பரிசு பெற்றார் டொனால்ட் ட்ரம்ப்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற முயற்சிக்கும் நிலையில், அவருக்கு கிடைக்கவில்லை.

அதேநேரம் அவருக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஃபிஃபா அமைதி பரிசு வழங்கப்பட்டுள்ளது. உலக கால்பந்து அமைப்பான ஃபிஃபா சார்பில் டிரம்ப்புக்கு அமைதிக்கான பரிசு இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இதை வாங்கிய உடன் மேடையில் டொனால்ட் டிரம்ப் மனம் நெகிழ்ந்து ஆனந்த கண்ணீர் வடிக்காத குறையாக ஆதங்கத்துடன் தனது பெருமைகளை பேசினார்.

2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்கான விழாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் ஃபிஃபா அமைதி பரிசைப் பெற்றுள்ளார். ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ இந்த ஆண்டு முதல் முறையாக ஃபிஃபா அமைதி பரிசு விருதினை அறிமுகப்படுத்தியுள்ளார், இது "அமைதிக்காக விதிவிலக்கான மற்றும் அசாதாரண நடவடிக்கைகளை எடுத்த" மற்றும் "உலகம் முழுவதும் மக்களை ஒன்றிணைத்ததற்காக டிரம்புக்கு வாங்கப்பட்டுள்ளது.

ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோவும், அமெரிக்க அதிபர் டிரம்பும் நெருக்கமாக நட்பு பாராட்டுபவர் ஆவார். இவர் தான் டிரம்புடன் பல்வேறு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். டிரம்பின் நீண்ட நாள் ஏக்கம் என்பது அமைதிக்கான நோபல் பரிசு பெற வேண்டும் என்பது தான். ஆனால் அவருக்கு இதுவரை கிடைக்கவில்லை. இந்த சூழலில் தான் தனது அருமை நண்பரான ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோவின் கையால் ஃபிஃபா அமைதி பரிசினை வாங்கினார். வாஷிங்டன் டிசி நகரில் நடந்த விழாவில் இந்த விருந்து வழங்கப்பட்டுள்ளது. தங்க கோப்பையும், சான்றிதழும் டிரம்ப் கைகளில் வாங்கியதுமே, ஆனந்த கண்ணீர் வடிக்காத குறை தான். மிகவும் பூரித்து போனார்.

தொடர்ந்து விழாவில் டிரம்ப் பேசுகையில், "இது உண்மையில் என் வாழ்க்கையின் மிகச்சிறந்த கௌரவங்களில் ஒன்றாகும், மேலும் விருதுகளைத் தாண்டி, நான் காங்கோ குடியரசில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களை காப்பாற்றினேன். இதேபோல் இந்தியா-பாகிஸ்தானை போரை முடிவுக்கு கொண்டு வந்தேன்.

இப்படி என்னால் பலவேறு போர்களை முடிவுக்குக் கொண்டு வர முடிந்தது, சில சமயங்களில், அந்த போர்கள் தொடங்குவதற்குச் சற்று முன்பாகவும், சில போர்கள் சரியாக அவை தொடங்குவதற்கு முன்பாகவும் முடிவுக்கு கொண்டு வந்தேன்.. சில போர்கள் முடிவுக்கு வர தாமதமாகிவிடும் போலிருந்தது, ஆனால் நான் அவற்றை சரியாக செய்து முடிவுக்கு கொண்டு வந்தேன். உலகம் இப்போது பாதுகாப்பான இடமாக மாறிவிட்டது. ஒரு வருடம் முன்பு அமெரிக்கா நன்றாக இல்லை; இப்போது நாம் உலகின் மிகவும் உற்சாகமான நாடாக இருக்கிறோம்" என்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *