ஓணம் பண்டிகை மகிழ்ச்சி, ஒற்றுமை, செழிப்பை வளர்க்கிறது – பிரதமர் மோடி வாழ்த்து

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி: கேரள மக்களின் முக்கிய அறுவடைத் திருவிழாவான ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மகாபலி மன்னரை வரவேற்கும் விதமாக கேரளா முழுவதும் இன்று ஓணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

“இனிய ஓணம் பண்டிகை வாழ்த்துகள். உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் துடிப்பான பண்டிகைகளில் ஓணமும் ஒன்றாகும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் முதன்மையாகக் கொண்டாடப்படும் இந்த அறுவடைத் திருவிழா, மக்களிடையே மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகிய உணர்வுகளை மேலும் வளர்க்கட்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *