எனது வழிகாட்டி மற்றும் நலம் விரும்பி மறைந்த ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்கள் - ரஜினிகாந்த் இரங்கல்!

top-news

பிரபல பத்திரிக்கையாளர், தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர் ராமோஜி ராவ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எனது வழிகாட்டியும் நலம் விரும்புபவருமான ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்களின் மறைவைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். பத்திரிகையிலும், சினிமாவிலும் சரித்திரம் படைத்தவர், அரசியலில் மாபெரும் கிங்மேக்கராகத் திகழ்ந்தவர். அவர் என் வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த ஜூன் 5ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமோஜி ராவ், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *