நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய ஒன்றரை மாதக் குழந்தை பத்திரமாக மீட்பு

top-news
FREE WEBSITE AD

காத்மாண்டு, செப். 1 –

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிய 45 நாட்களேயான ஒன்றரை மாத பச்சிளம் குழந்தையை நேபாள பாதுகாப்புப் படையினர் எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தின் போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ரசுவா மாவட்டத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆற்றின் ஓரங்களில் அமைந்திருந்த நகரங்கள் மற்றும் கிராமங்கள் வெள்ளநீரால் சேதமடைந்ததுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் மாடிகளிலும் உயரமான இடங்களிலும் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேபாள ராணுவம் மற்றும் ஆயுதக் காவல் படையினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

ரசுவா மாவட்டத்தில் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையின்போது, வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஒன்றரை மாதக் குழந்தையை ராணுவ வீரர்கள் கண்டறிந்து பாதுகாப்பாக மீட்டனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *