PH அம்னோவிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை! - ஜாஹிட் ஹமிடி
- Hisha Thamil
- 08 Oct, 2024
புத்ராஜெயா: அம்னோவின்
தலைவர்கள் கடந்தகால அறிக்கைகளை வெளியிட்டதற்காக, பக்காத்தான் ஹராப்பான் அம்னோவிடம்
மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என்று அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர்
எந்த அறிக்கையும் வெளியிடாத வரையில், மற்றவர்கள் வெளியிடும் அறிக்கைகள் தனிப்பட்ட இயல்புடையவை என்று ஜாஹிட் இன்று
தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான நட்மாவின் மாநாட்டை முடித்த பின்னர் செய்தியாளர்
கூட்டத்தில் கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோவின் பங்காளிகளைத் தொந்தரவு
செய்ய வேண்டாம் என்றும் அவர் அம்னோ தலைவர்களை வலியுறுத்தினார்.ஒருவரையொருவர்
மதிக்க வேண்டும், என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம்,
அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நூர் ஜஸ்லான் மொஹமட்,
பல ஆண்டுகளாக பக்காத்தான் உருவாக்கிய அவதூறு,
குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்மறையான
கருத்துக்களுக்காக பக்காத்தான் ஹராப்பான் தனது கட்சியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க
வேண்டும் என்றார்.
இத்தகைய
தாக்குதல்கள் வாக்காளர்கள் மத்தியில் அம்னோவின் நன்மதிப்பைக் கெடுத்துவிட்டதாக
நூர் ஜஸ்லான் கூறினார்.
மக்கோத்தா இடைத்தேர்தலில் அம்னோ அமோக வெற்றி பெற்றதை
அடுத்து, பக்காத்தான் ஹராப்பான் மன்னிப்பு கேட்க
வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *