சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி!
- Muthu Kumar
- 25 Mar, 2026
காங்கிரஸ் மூத்த தலைவரும் மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி நேற்று இரவு திடீரென டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மருத்துவமனைக்கு விரைந்தனர்.
மருத்துவர்கள் சோனியா காந்தியின் உடல் நிலையை கண்காணித்து வருவதாகவும், அச்சப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என கூறியதாகவும் சொல்லப்படுகிறது. டெல்லியில் காலநிலை மாற்றம் காரணமாக சோனியா காந்திக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இரு முறை பதவி வகித்தவர் சோனியா காந்தி. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார்.
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மகனும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். தாயாரை சந்தித்து உடல் நலம் விசாரித்த ராகுல் காந்தி சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.ராஜ்யசபா எம்பியாக உள்ள சோனியா காந்தி, கடந்த ஜனவரி மாதம் சுவாச பிரச்சினைகள் காரனமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
79 வயதான சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லோக்சபா எம்பியாகாவும் 5 முறை சோனியா காந்தி இருந்துள்ளார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியின் உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அச்சப்படும் அளவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



