பள்ளியின் நற்பெயரை காக்க கொடுமைப்படுத்தல் சம்பவங்களை மறைக்க வேண்டாம் - அன்வார் எச்சரிக்கை

top-news

கோலாலம்பூர், அக். 6 : பள்ளியின் நற்பெயரைப் பாதுகாக்கும் நோக்கில் கொடுமைப்படுத்தல் சம்பவங்களை மறைக்கக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

மக்களவையில் பிரதமரின் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உடல், வாய்மொழி, வாய்மொழியற்ற மற்றும் இணையவழி கொடுமைப்படுத்தல் தொடர்பாக 5,681 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

எனினும், பள்ளியின் பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்ற காரணத்தால் சில நிர்வாகங்கள் சம்பவங்களைப் பதிவு செய்யாமல் இருக்கலாம் என்பதால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

பள்ளியின் நற்பெயரைக் காக்க வேண்டும் என்பதற்காக குற்றமிழைப்பவர்களை பாதுகாக்கும் நிலை ஏற்படக்கூடாது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மனஅழுத்தத்துடன் பள்ளிக்குச் செல்லும் சூழல் மிகவும் கவலைக்குரியது. எந்தச் சம்பவமாக இருந்தாலும் உடனடியாகவும் உறுதியான முறையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.

கொடுமைப்படுத்தல் மற்றும் துன்புறுத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் பெற்றோர் மற்றும் குடும்பங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், பள்ளி பாதுகாப்பு சம்பவங்களை மறைப்பது அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க முடியாத நிலையை உருவாக்கும் என்று போலீஸ் படைத்தலைவர் காலிட் இஸ்மாயில் தெரிவித்த கருத்தையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.

ஜொகூரின் யோங் பெங்கில் நான்காம் படிவ மாணவி ஐரீன் சோபியா உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி பாதுகாப்பு மீதான கவனம் அதிகரித்துள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *