ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் ROS முடிவை குறைத்து மதிப்பிடாதீர்கள்! PN-க்கு அஸ்மின் அலி அறிவுறுத்தல்

top-news

கோலாலம்பூர், செப் 26: பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தோல்விகளை மறைப்பதற்காக, சங்கங்களின் பதிவிலாகா (RoS) அலுவலகத்தின் பங்கை "தீங்கிழைக்கும் மற்றும் ஆதாரமற்ற" குற்றச்சாட்டுகள் மூலம் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று பெர்சாத்து (Bersatu) பொதுச் செயலாளர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

1966-ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்திற்கும், கூட்டணியின் அரசியலமைப்பு விதிமுறைகளுக்கும் இணங்க தனது செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு பதிவிலாகா பலமுறை எழுத்துப்பூர்வ நினைவூட்டல்களை அனுப்பியுள்ளதாக அஸ்மின் தெரிவித்தார்.

PN கூட்டணியின் அரசியலமைப்பைப் பாதுகாப்பதிலும், அது வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் பொறுப்புக்கூறல் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படுவதை உறுதி செய்வதிலும் பெர்சாத்து எப்போதும் தனது கடமையை நிறைவேற்றும் என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

PN-க்கு எதிரான பதிவிலாகாவின் நடவடிக்கைக்குப் பின்னால், PN-க்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள கட்சிகளின் அரசியல் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று PN பொதுச் செயலாளர் தகியுதீன் ஹசான் கருத்து தெரிவித்திருந்தார்.

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு PN தயாராகி வரும் வேளையில், இந்த இடைநீக்க நடவடிக்கை "ஆச்சரியமாகவும் மிகுந்த ஏமாற்றமாகவும்" இருப்பதாக கெராக்கன் (Gerakan) கட்சியும் தெரிவித்தது. மேலும் இது "நாம் கடைபிடிக்க வேண்டிய ஜனநாயக உணர்வுக்கு முரணானது" என்றும் அது குறிப்பிட்டது.

இருப்பினும், கூட்டணியின் புதிய தலைமையால் அரசியலமைப்பு விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பாக ஆகஸ்ட் 11 அன்று பெர்சாத்து தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையிலேயே, பதிவிலாகா PN-ஐ இடைநீக்கம் செய்தது என்பதை அஸ்மின் மீண்டும் வலியுறுத்தினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *