அமைதியாக இருக்காதீர்கள்! அரசாங்கத்திலிருந்து விலகுங்கள்! - ரஃபிஸி ரம்லி
- Shan Siva
- 05 Oct, 2026
கோலாலம்பூர், அக் 5: அரசாங்கத்தின் கொள்கைகள் அல்லது முடிவுகளில் உடன்பாடு இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திலிருந்து தங்களைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என பெர்சாமா கட்சியின் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின்
கொள்கைகளை ஏற்க முடியாத நிலையில், அமைதியாக இருந்து
அரசாங்கத் தரப்பில் தொடர்ந்து அமர்ந்திருக்கக் கூடாது என அவர் கூறினார்.
அரசாங்கத்தின்
நிலைப்பாட்டை இனி ஆதரிக்க முடியவில்லை என்றாலோ, அரசாங்கத்தின் முடிவுகள் தங்களுடைய கொள்கைகளுக்கு எதிராக
இருந்தாலோ, அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்ள
வேண்டும் என ரஃபிஸி குறிப்பிட்டார்.
முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினரான ரஃபிஸி, தங்களுடைய
கொள்கைகளை உண்மையாகக் காப்பாற்ற விரும்பும் அரசாங்கப் பின்வரிசை உறுப்பினர்களுக்கு, கட்சி தாவல் தடுப்புச் சட்டம் காரணமாக
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதே ஒரே வழியாக இருப்பதாகக் கூறினார்.
தாமும் தற்போது
பெர்சாமாவில் உள்ள மற்றவர்களும் இதே காரணத்தால் பதவியை ராஜினாமா செய்ததாக அவர்
குறிப்பிட்டார்.
இதனால், அரசியலமைப்பில் உள்ள தற்போதைய கட்சி
தாவல் தடுப்பு நடைமுறை இன்னும் முழுமையாக உருவாக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக
ரஃபிஸி தெரிவித்தார்.
ரஃபிஸியும் நிக்
நஸ்மி நிக் அஹமட்டும், 2025-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பிகேஆர்
கட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா
செய்தனர்.
அடுத்த ஆண்டு
இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் ராஜினாமா செய்து, பிகேஆரில் இருந்து விலகினர். பின்னர் மே
மாதம் பெர்சாமா கட்சியைத் தொடங்கினர்.
ரஃபிஸியின்
நெருங்கிய ஆதரவாளர்களாக அறியப்படும் முன்னாள் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங்
சென் மற்றும் முன்னாள் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங்
ஆகியோரும் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து, பிகேஆரில் இருந்து விலகி பெர்சாமாவில்
இணைந்தனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

