ரஷ்யா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம்-அமெரிக்கா வலியுறுத்தல்!

top-news

ரஷ்யா (Russia), வட கொரியா (North Korea) உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க (America) அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பட்டியலில் ரஷ்யா , வட கொரியா, ஈரான் (Iran), ஈராக் (Iraq), உக்ரைன் (Ukraine), ஆப்கானிஸ்தான் (Afghanistan), பெலாரஸ் (Belarus), சிரியா (Syria), லெபனான் (Lebanon), லிபியா (Libya), சோமாலியா (Somalia), சூடான் (Sudan), வெனிசுலா (Venezuela) மற்றும் ஏமன் (Yemen) உள்ளிட்ட 20 நாடுகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாடுகளில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் ஏற்படும் என்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் - ரஷ்ய போர் மற்றும் சிரியாவின் உள்நாட்டு போர் ஆகியவை ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன.சோமாலியா, லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல்கள் இருக்கின்றது.

அத்தோடு, பெலாரஸ் (Belarus) மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.மேலும், வட கொரியாவில் வெளிநாட்டினர் மீது கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் தற்போது அமெரிக்கா குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *