நிலைத்தன்மையே வளர்ச்சிக்குக் காரணம்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், அக் 10: நாட்டின் ஆட்சியை மேம்படுத்த அரசியல் நிலைத்தன்மையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

எந்தவொரு நாடும், அதன் செல்வத்தைப் பொருட்படுத்தாமல், பொறுப்பான நிர்வாகம் இல்லாமல் தன்னையும் அதன் சமூகத்தையும் உயர்த்த முடியாது என்று அவர் மேற்கோள் காட்டினார்.

44வது மற்றும் 45வது ஆசியான் உச்சி மாநாடுகளில் கலந்து கொண்ட மலேசிய தூதுக்குழுவினரிடம் நேற்று  இரவு லாவோஸில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அன்வார் இவ்வாறு கூறினார்.

அரசியல் நிலைத்தன்மையே தொழில்துறை, டிஜிட்டல், எரிசக்தி மற்றும் செமி கண்டக்டர் துறைகளில் தெளிவான கொள்கைகளை அறிமுகப்படுத்த தனது நிர்வாகத்தை அனுமதித்தது என்று அவர் கூறினார்.

மேலும், இந்த தெளிவான கொள்கைகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் தேசிய பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதற்கும்  இந்த நிலைத்தன்மைதான் தேவையான மாற்றங்களைச் செயல்படுத்த அரசாங்கத்தை அனுமதித்தது என்றும் அன்வார் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *