யு எஸ் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் சின்னர் சாம்பியன்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் மோதினர். முதலிரண்டு செட்களை 6-3, 6-4 எனக் கைப்பற்றிய சின்னர், மூன்றாவது செட்டை 7-5 என போராடி வென்றார்.

இரண்டு மணி நேரம்16 நிமிடங்கள் நீடித்த போட்டியில் அசத்திய ஜானிக் சின்னர் 6-3, 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது இவரது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஏற்கனவே இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்றிருந்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *