தீவிர செல்வந்தர்களுக்கு ஆதாரவாக இருக்க வேண்டாம்-அன்வார் விமர்சகர்களுக்குப் பதிலடி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்:

புதிய T15 வருமான வகை பற்றிய விவாதங்களுக்கு மத்தியில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தீவிர செல்வந்தர்களுக்கு ஆதாரவாக இருக்க வேண்டாம் என்று விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

RON95 எரிபொருள் மானியத்தை சீராய்வு செய்வது, அடுத்த ஆண்டு மத்திதியில் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கான மானியங்களை நீக்குவது அவசியம் என்று அவர் கூறினார். ஏனெனில் அரசாங்கம் தற்போது ஆண்டுதோறும் RM20 பில்லியனை மானியத்திற்காக செலவிடுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.மானியங்களை நீக்குவது 85 சதவீத மக்களை பாதிக்காது என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகளைப் போல நாங்கள் T15 க்கு ஆதரவாக இருக்கக்கூடாது, அவர்களைப் பாதுகாத்து குறைந்த வருமானம் உள்ளவர்களைச் சுமையில் தள்ளக்கூடாது என்று அன்வார் தெரிவித்தார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *