வெட்கப்பட வேண்டாம் - குறுகிய மனப்பான்மையிலிருந்து விடுபடுங்கள் - ஏ ஆர் ரஹ்மான்!
- Muthu Kumar
- 17 Jan, 2026
மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க தொடங்கியவர் ஏ.ஆர்.ரகுமான்.
தற்போது ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து ராமாயணா என்கிற திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் இந்த படம் பற்றி பேசிய ஏ.ஆர் ரஹ்மான் 'நான் ஒரு இஸ்லாமியர்.. ஜிம்மர் ஒரு யூதர்.. ராமாயணம் இந்து மதம் சார்ந்தது.. நாங்கள் இருவரும் இந்த படத்திற்காக சேர்ந்து இசையமைப்பது பெருமையாக இருக்கிறது..
இது குறித்து பலர் கேள்வி எழுப்பலாம்.. ஆனால் நான் பிராமண பள்ளியில் படித்தவன்.எனக்கு ராமாயணம் மிகவும் பரிச்சயமான கதை.. லட்சியம், ஒழுக்கம் பற்றிய கதை அது.நல்லவர்கள், கெட்டவர்கள், அரசர், யாசகர் என யாரிடமிருந்தும் அறிவை பெற்றாலும் அது விலைமதிப்பற்றது என ஒரு தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறார். அதற்கு வெட்கப்பட தேவையில்லை.குறுகிய மனப்பான்மையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.அப்போதுதான் பிரகாசிக்க முடியும்' என கூறியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



