தனி நபர் ஊழலை கட்சிக்கானதாக சொல்லாதீர்கள்! - ஹம்சா ஜைனுதீன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 14: தனிநபர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை, அரசியல் கட்சிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை நிராகரிப்பதற்கான காரணமாகப் பயன்படுத்தக் கூடாது என்று பார்ட்டி வவாசான் நேகாரா தலைவர் ஹம்சா ஜைனுதீன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொள்கை, பாரிசான் நேஷனல்மற்றும் பெரிகாத்தான் நேஷனல ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வுக்கும் சமமாகப் பொருந்தும் என்றும் அவர் கூறினார்.

FMT-க்கு அளித்த பேட்டியில், ஒரு தனிநபரின் தவறான செயலுக்காக ஒரு முழு கட்சியையும் ஊழலுடன் தொடர்புபடுத்துவது நியாயமற்றது என்று அவர் கூறினார்.

ஊழல் ஒரு கட்சியால் செய்யப்படுவதில்லை, மாறாக கட்சிகள்தான் இந்த ஒத்துழைப்பில் ஈடுபடுகின்றன. எனவே, கட்சிகளும் ஊழல் செய்பவர்களும் ஒன்றுதான் என்பது போல நாம் பேசக்கூடாது என்று தெரிவித்தார்.

கட்சிகள் ஊழலுடன் தொடர்புடையவையாக இருந்தால், BN-PN ஒத்துழைப்பின் மூலம் மலாய்காரர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் அர்த்தமற்றதாகிவிடுமா என்று கேட்கப்பட்டபோது, ​​ஒரு கட்சி ஊழல் செய்கிறது என்ற கருத்து எந்தக் கட்சிக்கும் நியாயமற்றது என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *