மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் தொடரில் இருந்து மென்சிக் திடீர் விலகல்!

top-news

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.கடந்த ஆண்டு நடைபெற்ற மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்நிலையில், செக் குடியரசைச் சேர்ந்த ஜாகுப் மென்சிக் மான்டே கார்லோ டென்னிஸ் தொடரில் இருந்து திடீரென விலகியுள்ளார். வரும் தொடர்களில் பங்கேற்க உள்ளதால் தற்போது ஓய்வு எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த வாரம் நடந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *