அம்னோ & பாரிசான் நேஷனலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்! பக்காத்தானுக்கு கைரி அறிவுறுத்து

top-news

கோலாலம்பூர், ஜூலை 20: நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பெரிகாத்தான் நேஷனலுடன் ஒத்துழைக்க பாரிசான் நேஷனல் முடிவு செய்திருப்பது, பக்காத்தான் ஹரப்பானுக்கு  ஒரு சமிக்ஞையை அனுப்புவதற்காகத்தான் என்று அம்னோ இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு சுபாங்கில் நடந்த அம்னோ கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கைரி, மத்திய அரசு மலாய் மக்களின் உணர்வுகளுக்குப் போதுமான கவனம் செலுத்தவில்லை என்றும், அது அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்றும் சில அம்னோ உறுப்பினர்கள் உணர்வதாகக் கூறினார்.

சீர்திருத்தங்களை முன்னெடுப்பதிலும், தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் தாங்கள் அடைந்த தோல்விக்கு, அவர்கள் அம்னோவைக் குறை கூறுவது போல் உள்ளது என்று அவர் கூறினார்.

இருப்பினும், ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து BN வெளியேறவோ அல்லது முன்கூட்டியே பொதுத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கவோ தேவையில்லை என்று கைரி கூறினார்.

பொதுத் தேர்தல் வரை காத்திருக்க முடியும். அம்னோ மற்றும் பாரிசான் நேஷனலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பக்காத்தான் ஹராப்பானுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்புவதற்காக மட்டுமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறோம்  என்று அவர் கூறினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *