குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தின் வேற லெவல் சம்பவம்!

top-news

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் அஜித்தும் த்ரிஷாவும் ஆறாவது முறையாக ஜோடியாக நடித்துள்ளார்கள். பிரசன்னா , அர்ஜூன் தாஸ் , யோகிபாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் மற்றும் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. குட் பேட் அக்லி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

அஜித்தின் மிகப்பெரிய ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் செம வெயிட்டான சம்பவத்தை செய்திருக்கிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி அஜித்தின் கரியரில் மிக வித்தியாசமான படமாக இருக்கும் என்பதை இந்த டீசரை வைத்தே சொல்லலாம். படம் முழுவதும் அஜித்தின் வெவ்வேறு கெட் அப்களில் அஜித்தை பார்க்க ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆக்‌ஷன் விருந்து காத்திருக்கிறது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *