செயற்கை நுண்ணறிவால் மனித குலத்தை எச்சரித்த கூகுள் நிறுவன நிர்வாகி!
- Muthu Kumar
- 07 Aug, 2025
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையால் வரும் காலத்தில் பெரும் ஆபத்து இருப்பதாகவும் மிடில் கிளாஸ் எனப்படும் நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று இருக்காது, ஒன்று பெரும் பணக்காரர் அல்லது ஏழையாக மட்டுமே இருக்க முடியும் என்று திடுக்கிடும் தகவல்களை கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயரதிகாரி வெளியிட்டுள்ளார்.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்ப உலகில் பெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டது என்று சொல்லலாம். ஏஐ பயன்பாட்டால் ஒருபக்கம் எத்தனையோ பயன்கள் ஏற்படுவதாக சொல்லப்பட்டாலும் இன்னொரு பக்கம் மனிதர்களின் வேலைகளை திருட ஆரம்பித்துவிட்டது.
செயற்கை நுண்ணறிவால் வரும் காலத்தில் மிடில் கிளாஸ் என்ற வர்க்கமே இருக்காது என்று கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி திடுக் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி மோ காவ்தத் எச்சரித்துள்ளார்.
ஏஐ காரணமாக வேலைகள் கணிசமாக குறையும் என்றும், இதனால் நடுத்தர வர்க்கம் என்ற ஒன்றே இல்லாமல் போகும் என்றும் அவர் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டு கூகுள் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாக இருந்த காவ்தத், இந்த திடுக் தகவலை கூறியுள்ளார். வரும் 2027 முதல் நிலைமை மோசமடையத் தொடங்கும் எனக் கணித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் சமூக அமைதியின்மை ஏற்படும் என்றும் மக்கள் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையின் நோக்கத்தையும் இழப்பதால் மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து, தனிமை உணர்வும், சமூகப் பிளவுகளும் ஆழமடையும் என்றும் எச்சரித்து உள்ளார். "நீங்கள் டாப் 0.1% பணக்காரர்களுக்குள் இல்லையென்றால், நீங்கள் ஒரு ஏழை விவசாயியாகத்தான் இருக்க வேண்டும். நடுத்தர வர்க்கம் என்பதே இருக்காது.
ஒயிட் காலர் ஜாப்ஸ் எனப்படும் வெள்ளை காலர் வேலைகள், அதாவது மென்பொருள் உருவாக்குநர்கள், சிஇஓ-க்கள், பாட்காஸ்டர்கள் என யாரும் ஏஐ-யின் தாக்கத்திலிருந்து தப்ப முடியாது. அடுத்த 15 ஆண்டுகள் சொர்க்கத்தை அடைவதற்கு முன் நரகமாக மாறிவிடும்" என்று தெரிவித்தார். தனது Emma.love என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உதாரணமாகக் காட்டி இவ்வாறு பேசியுள்ளார் காவ்தத்.
உணர்ச்சி மற்றும் உறவுசார் AI-யை உருவாக்கும் இந்த நிறுவனத்தை மூன்று பேர் மட்டுமே நிர்வகிப்பதாக அவர் குறிப்பிட்டார். "முன்பு இந்த மாதிரி ஸ்டார்ட்அப்களுக்கு 350 டெவலப்பர்கள் தேவைப்பட்டிருப்பார்கள். பாட்காஸ்டர்கள் கூட ஏஐ-யால் மாற்றப்படுவார்கள் " என்று அவர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையே, 'ஏஐ-யின் காட்பாதர்' என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், ஏஐ விரைவில் தனக்கென ஒரு மொழியை உருவாக்கிக்கொள்ளும் என்றும், இதனால் மனிதர்களால் இயந்திரங்களைக் கண்காணிக்க முடியாமல் போகும் என்றும் எச்சரித்துள்ளார்.
அதாவது, "இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று பேச தங்கள் சொந்த உள் மொழிகளை உருவாக்கினால் அது இன்னும் பயங்கரமானது. அவை சிந்திக்க தங்களுக்குள் ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன், அப்போது அவை என்ன நினைக்கின்றன என்பது நமக்குத் தெரியாது.
AI ஏற்கனவே பயங்கரமான எண்ணங்களை உருவாக்கக்கூடிய திறனை வெளிப்படுத்தியுள்ளது. மனிதர்களால் கண்காணிக்க முடியாத வகையில் இயந்திரங்கள் சிந்திப்பது சாத்தியமே" என ஹிண்டன் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
aiPxvpay
555-1 OR 863=(SELECT 863 FROM PG_SLEEP(15))--
aiPxvpay
555-1) OR 504=(SELECT 504 FROM PG_SLEEP(15))--
aiPxvpay
555
aiPxvpay
555-1)) OR 201=(SELECT 201 FROM PG_SLEEP(15))--
aiPxvpay
555
aiPxvpay
555UVah6GnU' OR 752=(SELECT 752 FROM PG_SLEEP(15))--
aiPxvpay
555
aiPxvpay
555xGBvP1IQ') OR 90=(SELECT 90 FROM PG_SLEEP(15))--
aiPxvpay
555*if(now()=sysdate(),sleep(15),0)
aiPxvpay
555cVe7zzCT')) OR 962=(SELECT 962 FROM PG_SLEEP(15))--



