கூகுள் இந்தியாவின் தரமான பதிவு! விஜய் ரசிகர்கள் குஷியோ குஷி!

top-news
FREE WEBSITE AD

விஜய் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு, வெளியாகும் படம் என்பதால் 'கோட்' படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து 'விசில் போடு..', 'சின்ன சின்ன கண்கள்..' என இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி இருந்தன. மூன்றாவதாக 'அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு..என் முன்னால நடந்தா கேட் வால்க்-கு'' என்ற பாடலும் வெளியானது. இதனைத் தொடர்ந்து கோட் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், நேற்று மாலை ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

காந்தி எனும் கதாபாத்திரத்தில் வரும் விஜய் பெயருக்கு எதிர்மாறாக மது அருந்தும் காட்சிகள் டிரெய்லரில் இடம்பெறுள்ளன. விஜய்யின் டீ ஏஜிங் காட்சிகள் வித்தியாசமாக தெரிகின்றன. 90 காலக்கட்டங்களில் கதாநாயகனாக ஜொலித்த மோகன், 'கோட்' படத்தில் பயங்கரவாதியாக வந்து மிரட்டுகிறார்.

மறுபக்கம் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் விஜய்க்கு உதவும் காதாபாத்திரமாக நடித்துள்ளனர். விஜய் வழக்கம்போல் ஆக்சனில் தெறிக்க விடுவார் என்பது டிரெய்லரை பார்க்கும் தெரிகிறது. டிரெய்லரில் விஜய் பேசும் ''இனிமே குடிக்கவே கூடாதுடா'' என்ற வசனமும், ''மருதமலை மாமணியே முருகையா'' என்று விஜய் படும் பாடலும் அஜித்தின் மங்காத்தா திரைப்பட காட்சிகளையும், விஜய்யின் கில்லி படத்தின் காட்சிகளையும் நினைவுப்படுத்துகின்றன. பாடல்களில் சொதப்பிய யுவன் ஷங்கர் ராஜா, டிரெய்லரின் பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார். டிரெய்லரை பார்க்கும்போது ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக 'கோட்' உருவாகியுள்ளது என்பது தெரிகிறது.

இந்நிலையில் யூடியூபில் 'கோட்' ட்ரெய்லர் வெளியான 14 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்து தெறிக்க விட்டிருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் டிரெய்லர் சில மணி நேரங்களிலேயே 20 மில்லியன் பார்வைகளையும் 1 மில்லியன் லைக்குகளையும் பெற்றது இதுவே முதல்முறையாகும். இதுவே ரசிகர்களின் மத்தியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை உணர்த்துகிறது. இதையெல்லாம் தாண்டி கூகுள் இந்தியா ஒரு படி மேலே சென்று, 'கோட்' ட்ரெயிலரில் வரும் "A lion is always a lion" என்ற டயாலாக்கை மேற்கோளிட்டு 'தளபதியின் இரட்டை சம்பவத்திற்கு தயார்' என X தளத்தில் பதிவிட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *